உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

Published On 2023-08-27 12:21 IST   |   Update On 2023-08-27 12:21:00 IST
  • சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு 6 தேர்வு மையங்களில் நடைபெற்றது
  • 2584 பேர் தேர்வெழுதிய நிலையில், 571 பேர் தேர்வெழுத வரவில்லை

பெரம்பலூரில்

தமிழக காவல்துறையில் 750 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுவதற்கான எழுத்து தேர்வு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் நேற்று காலையில் முதன்மை எழுத்து தேர்வும், மாலையில் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வும் நடந்தது. அதன்படி இந்த தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும வளாகத்தில் உள்ள கல்லூரிகளில் 6 தேர்வு மையங்களில் 158 அறைகளில் நடந்தது. இந்த தேர்வினை எழுதுவதற்காக பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2,311 ஆண் தேர்வர்களும், 844 பெண் தேர்வர்களும் என மொத்தம் 3,155 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

காலை, மாலை நடந்த தேர்வினை 1,920 ஆண்களும், 664 பெண்களும் என மொத்தம் 2,584 பேர் எழுதினர். 391 ஆண்களும், 180 பெண்களும் என மொத்தம் 571 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வினை சென்னை தலைமையிட போலீஸ் ஐ.ஜி. (நலன்) நஜ்மல் ஹோடா, மதுரை மண்டல மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜீத்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு பணியில் மொத்தம் 375 போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News