உள்ளூர் செய்திகள்

புத்தக திருவிழா நடத்த வலியுறுத்தல்

Published On 2022-06-26 08:00 GMT   |   Update On 2022-06-26 08:00 GMT
  • புத்தக திருவிழா நடத்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
  • தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்

பெரம்பலூர்:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பெரம்பலூர் மாவட்ட 8 வது மாநாடு பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கில் நடந்தது. மாநாட்டுக்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார்.

மாநாட்டில் பெரம்பலூரில் மாவட்ட நிர்வாகம் மீண்டும் புத்தகத் திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பொதுத்தேர்வில் பிளஸ் 2 மற்றும் 10ம்வகுப்பு தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் முதல் மற்றும்

இரண்டாம் இடம் பெற பாடுபட்ட மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வது, பெரம்பலூர் மாவட்ட கலைஞர்கள் எழுத்தாளர்களின் கலைத்திறன் செயல்பாடுகளை நடத்த பொது வெளி அரங்க மேடை அமைக்கவேண்டும்.

பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கலைத் திறன் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் கலை எழுத்து திறன் போட்டிகள் நடத்த வேண்டும். பள்ளிகளில் இலக்கிய மன்றம், நூலகம் ஆகியவற்றின் செயல்பாடுகளை புனரமைத்து நன்முறையில் செயல்படுத்த வேண்டும், உலகளவில் பெரம்பலூரில் தொல்லியல் பெருமையை வெளிப்படுத்தும் பொருட்டு பெரம்பலூர் தொல்லியல் ஆய்வு பகுதியாக அறிவித்து தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட பொருளாளர் ராமர் வரவேற்றார். முடிவில் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News