பெரம்பலூரில் 1,500 கிலோ ரேசன் அரிசி கடத்தியவர் கைது
- குடிமை பொருள் வழங்கல் குற்றப்பு–லனாய்வு பிரிவு எஸ்ஐ ஞானசேகரன் தலைமை–யிலான போலீசார் வாலி–கண்டபுரம், வேப்பந்தட்டை, நெற்குணம் ஆகிய பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- வேனில் 50 கிலோ எடையுள்ள 30 சாக்கு மூட்டைகள் இருந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்ஐ ஞானசேகரன் தலைமையிலான போலீசார் வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை, நெற்குணம் ஆகிய பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பெரம்பலூர் - வி.களத்தூர் சாலையில் நெற்குணம் சந்திப்பு பகுதி அருகே வி.களத்தூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது வேனில் 50 கிலோ எடையுள்ள 30 சாக்கு மூட்டைகள் இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது அரசால் வழங்கப்படும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1,500 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அரிசியை கடத்தி வந்தவரிடம் விசாரணை செய்தபோது பெரம்பலூர் மாவட்டம், தேனூர் மேலத்தெருவை சேர்ந்த சின்னசாமி மகன் கலியபெருமாள் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து வேனையும், அரிசி மூட்டையும் பறிமுதல் செய்த குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து கலியபெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.