உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்

Published On 2023-06-01 06:30 GMT   |   Update On 2023-06-01 06:30 GMT
  • பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
  • 2ம் கட்ட பொது கலந்தாய்வு வரும் 12ம்தேதி முதல் நடைபெறுகிறது

பெரம்பலூர்,

பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டின் இளங்கலை பட்டப்படிப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவ,மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான பொது கலந்தாய்வில் முதல் கட்டமாக இன்று (1ம்தேதி) தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 2ம்தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 3ம்தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 6ம்தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

முதல் பொது கலந்தாய்வில் 2ம் கட்டமாக வரும 7ம்தேதி தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 8ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 9ம்தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 10ம் தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ,மாணவிகள் இணையதள விண்ணப்ப நகல், மாற்று சான்றிதழ், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்ப படிவ நகல், 5 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் கல்லூரிக்கு 9.30 மணிக்குள் வர வேண்டும். 2ம் கட்ட பொது கலந்தாய்வு வரும் 12ம்தேதி முதல் நடைபெறுகிறது. அதற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News