உள்ளூர் செய்திகள்

மக்கள் நலத்திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது- அமைச்சர் தகவல்

Published On 2022-07-07 10:04 GMT   |   Update On 2022-07-07 10:04 GMT
  • மக்கள் நலத்திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ரூ.2.77 கோடி மதிப்பில் மாணவியர் விடுதிக்கான புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் வெங்கடபிரியா தலைைம வகித்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ.பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது,

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. முதலமைச்சர் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து அது கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதில் தனி கவனம் செலுத்துவதனால் தமிழ்நாடு முதன்மையாக திகழ்ந்து வருகிறது. வேப்பூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக மாணவர்கள் விடுதி அமைப்பதற்கு ரூ.2.77 கோடி செலவில் கட்டிடங்கள் கட்டுவதற்காக அடிக்கல் நடப்பட்டுள்ளது. வேப்பூர் அரசினர் மகளிர் கல்லூரிக்கு வருகின்ற மாணவர்களுடைய வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுடைய வசதிக்காக மருவத்தூர் குரும்பபாளையம் எறையூர் வரையிலான பேருந்து வழித்தடம் இன்றைக்கு துவங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கென 21,000 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளை தவறாக நடத்துகின்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

Similar News