உள்ளூர் செய்திகள்

பங்குனி உத்திர திருவிழா

Published On 2023-03-28 12:05 IST   |   Update On 2023-03-28 12:05:00 IST
  • செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது
  • சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நேற்று மாலை விநாயகர் வழிபாடு வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது.இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மேலும் கொடி மரத்திற்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்ட பூஜைகள் நடைபெற்றது.பின்னர் பக்தர்களின் "அரோகரா அரோகரா" கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் செட்டிகுளம் நாட்டாரங்கலம் கூத்தனூர், ஆலத்தூர்கேட், பாடாலூர் சிறுவயலூர்,நக்கசேலம், மங்கூன், பொம்மனப்பாடி இரூர், சீதேவிமங்கலம், சத்திரமனை, மாவிலிங்கை உள்ளி பல்வேறு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும்.நாள்தோறும் இரவு சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருவீதி உலா நடைபெறும்.வருகிற 02 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. திங்கள்கிழமை இரவு குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவுடன் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி என தேரோட்டம் வருகிற 04ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஹேமாவதி, தக்கார் வேல்முருகன்,அறங்காவலர் குழு, கோயில் ஊழியர்கள்,உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News