உள்ளூர் செய்திகள்

மின் கட்டண உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-30 15:22 IST   |   Update On 2022-07-30 15:22:00 IST
  • மின் கட்டண உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பெரம்பலூர்:

மின் கட்டண உயர்வை கண்டித்தும், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் புது ஆத்தூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் கிளை துணைத் தலைவர் முகமது உசேன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் அகமது இக்பால், செயற்குழு உறுப்பினர் ஷாஜஹான், தொகுதி பொருளாளர் சகாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News