உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் மாரியம்மன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை

Published On 2022-09-11 14:33 IST   |   Update On 2022-09-11 14:33:00 IST
  • மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வந்து பார்த்த போது உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.
  • கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்ட போது அதில் அதிகாலை 2.15 மணியளவில் ஒரே மொபட்டில் வந்த 3 மர்மநபர்கள், கோவிலை சுற்றி வந்தது தெரிய வந்தது.

பெரம்பலூர் :

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையம் பாரதி நகரில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து பார்த்த போது உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து அவர்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் அதிகாலை 2.15 மணியளவில் ஒரே மொபட்டில் வந்த 3 மர்மநபர்கள், கோவிலை சுற்றி வந்தனர்.

பின்னர் அதில் 2 பேர் இறங்கி கோவிலுக்குள் சென்று அங்கிருந்த உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடிக்கொண்டு வெளியே வந்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரும், தயார் நிலையில் நின்று கொண்டிருந்தவரின் மொபட்டில் ஏறி மின்னல் வேகத்தில் பெரம்பலூர் நோக்கி தப்பி சென்றது பதிவாகியிருந்தது.

அந்த காட்சிகளை வைத்து போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News