உள்ளூர் செய்திகள்

விசுவக்குடியில் மிலாது நபி விழா

Published On 2022-10-10 15:48 IST   |   Update On 2022-10-10 15:48:00 IST
  • விசுவக்குடியில் மிலாது நபி விழா நடைபெற்றது.
  • சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடியில் முகமது நபி பிறந்த நாளை மிலாது நபி விழாவாக அனுசரித்தனர். விழாவையொட்டி சமுதாய கூடத்தில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளிவாசல் தலைமை இமாம் முகமது சுலைமான் தலைமை தாங்கினார். லெப்பைகுடிகாடு கிழக்கு பள்ளிவாசல் இமாம் முகம்மது ஆரிப் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி கந்தூரி விருந்து நடைபெற்றது. இதில் மத நல்லிணக்கத்துடன் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள்."

Tags:    

Similar News