உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் அருகே மகாலிங்கம் சித்தர் குருபூஜை விழா
- பெரம்பலூர் அருகே மகாலிங்கம் சித்தர் குருபூஜை விழா நடைபெற்றது
- பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே எளம்பலூர் சமத்துவபுரத்தில் மகாலிங்கம் சித்தர் மற்றும் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடைபெற்றது. எளம்பலூர் சமத்துவபுரத்தில் மகாலிங்கம் சித்தர் குருபூஜை விழா மற்றும் மாணிக்கவாசகர் குருபூஜை விழா பெரம்பலூர் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது. டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணி தலைமை தலைமையில், அரசு வக்கீல் சுந்தரராஜன் முன்னிலையில், சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் ஆகியோர் பூஜைகளை நடத்தி வைத்தனர். அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையுடன், கோமாதா பூஜை, 210 மகா சித்தர்கள் யாகம் நடைபெற்றது. தொடர்ந்து பொது மக்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சன்மார்க்க சங்க பொறுப்பாளர் கிஷோர்குமார், தயாளன், ராமமூர்த்தி, இயக்குனர் செந்தில், சுகுமார், தமிழ்செல்வன், சுந்தராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.