உள்ளூர் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது
- லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் நேற்று ரோந்து சென்றனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பழைய பஸ் நிலையம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பெரம்பலூர் மேட்டு தெரு, ராமபிள்ளை காலனியை சேர்ந்த கமல்பாஷாவை (வயது 46) கைது செய்தனர். அவரிடம் இருந்த வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,100 பறிமுதல் செய்யப்பட்டது."