உள்ளூர் செய்திகள்

ஆசிரியை வீட்டில் நகை-பணம் திருட்டு

Published On 2022-09-12 14:24 IST   |   Update On 2022-09-12 14:24:00 IST
  • ஆசிரியை வீட்டில் நகை-பணம் திருட்டு போனது.
  • குடும்பத்துடன் ஊருக்கு சென்றுவிட்டார்

பெரம்பலூர்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள வெங்கடாஜலபதி நகர் 3-வது குறுக்கு தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சரவணன் (வயது 45). இவருக்கு கலைமணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கலைமணி ஆலத்தூர் தாலுகா, காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சரவணன் வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகா, பெரியேரி கிராமத்துக்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார். பின்னர் அவர் நேற்று இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவை சாவி மூலம் திறந்து, அதில் வைத்திருந்த 3¾ பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு சரவணன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.

Tags:    

Similar News