உள்ளூர் செய்திகள்

தொழிலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2023-02-14 12:43 IST   |   Update On 2023-02-14 12:43:00 IST
மோப்பநாய் உதவியுடன் கொள்ளையர்களை தேடி வரும் போலீசார்

பெரம்பலூர்

வடக்கு மாதவி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 45). இவருக்கு ஜெயா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குணசேகரனும், ஜெயாவும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் கடந்த 10-ந்தேதி தங்கள் வீட்டில் உள்ள பீரோவில் 1 பவுன் மோதிரம், ரூ.30 ஆயிரம், ஒரு ஜோடி கொழுசு ஆகியவற்றை வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். முன்னதாக அவர்களது பிள்ளைகளும் கல்லூரி மற்றும் பள்ளிக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று காலை அவர்கள் பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த நகை, பணம், கொழுசு ஆகியவை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து குணசேகரன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்ப நாய் பைரவா வரவழைக்கப்பட்டு துப்பு துவக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News