உள்ளூர் செய்திகள்

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி

Published On 2022-06-28 09:39 GMT   |   Update On 2022-06-28 09:39 GMT
  • இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
  • புதிய மையம் தொடங்குவதற்கான 2 நாள் பயிற்சி

பெரம்பலூர்:

பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய ஒன்றியங்களில் இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கான புதிய மையம் தொடங்குவதற்கான 2 நாள் பயிற்சி சங்குப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (கிழக்கு) நடந்தது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூா்த்தி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் ரமேஷ், அன்பரசு, நவநீதன், இல்லம் தேடி கல்வி பெரம்பலூர் ஒன்றிய வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் அங்காளஈஸ்வரி, ரமேஷ் ஆகியோர் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு 1 முதல் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

Tags:    

Similar News