உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் அருகே வேட்டை கும்பலை விரட்டி பிடித்த வனத்துறை

Published On 2022-07-31 09:40 GMT   |   Update On 2022-07-31 09:40 GMT
  • சிறுவாச்சூர் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததை அறிந்து பிடிக்க முயன்ற போது தப்பித்தாக கூறப்படுகிறது.
  • இதைத் தொடர்ந்து வனச்சரக அலுவலர் பழனிக்குமரன், வனவர் பிரதீப் குமார், வனக்காப்பாளர்கள் அன்பரசு, ஜெஸ்டின் செல்வராஜ், ரோஜா மற்றும் செல்வகுமாரி மற்றும் வனக்காவலர்கள் சிலம்பரசன் வீரராக ன், அறிவுச்செல்வன் ஆகியோர் எசனை வனப்பகுதி வரை விரட்டி சென்று அவர்களை பிடித்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே வனப்பகுதியில் வெளியூரிலிருந்து வனவிலங்குகளை வேட்டையாட வந்த 21பேரை வனத்துறையினர் விரட்டி பிடித்தனர்.

பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிக்குமரன் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது திருச்சி, விராலிமலை , மணப்பாறை, புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்து 21 பேர் வேட்டையாடக்கூடிய குழு ஒன்று வேட்டை நாய்கள்,கருவிகளுடன் பெரம்பலூர் அருகே அள்ள சிறுவாச்சூர் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததை அறிந்து பிடிக்க முயன்ற போது தப்பித்தாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து வனச்சரக அலுவலர் பழனிக்குமரன், வனவர் பிரதீப் குமார், வனக்காப்பாளர்கள் அன்பரசு, ஜெஸ்டின் செல்வராஜ், ரோஜா மற்றும் செல்வகுமாரி மற்றும் வனக்காவலர்கள் சிலம்பரசன் வீரராக ன், அறிவுச்செல்வன் ஆகியோர் எசனை வனப்பகுதி வரை விரட்டி சென்று அவர்களை பிடித்து

பெரம்பலூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து வனப்பாதுகாப்பு சட்ட அடிப்படையில் அவர்களிடம் அபராதம் விதித்து வனவிலங்கு பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News