உள்ளூர் செய்திகள்

வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய கூடாது - பெரம்பலூர் கலெக்டரிடம் பொது மக்கள் மனு

Published On 2022-08-18 09:42 GMT   |   Update On 2022-08-18 09:42 GMT
  • நன்னை கிழக்கு நத்தம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த 57 பேருக்கு கடந்த 2001ம் ஆண்டு வீட்டுமனை பட்டா அரசால் வழங்கப்பட்டது,
  • எங்களுக்கு மாற்று இடம் கிடையாது. எனவே நாங்கள் அங்கேயே குடியிருந்து வசிக்க வழிவகை செய்யவேண்டும்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியம், நன்னை போஸ்டாபீஸ் வீதியை சேர்ந்த 50க்கு மேற்பட்டோர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது,

நன்னை கிழக்கு நத்தம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த 57 பேருக்கு கடந்த 2001ம் ஆண்டு வீட்டுமனை பட்டா அரசால் வழங்கப்பட்டது, இதையடுத்து அந்த இடத்தில் நாங்கள் வீடு கட்டி வசித்து வருகிறோம்.

இந்நிலையில் கடந்த 9ம்தேதி வருவாய்த்துறை மூலம் நிளஅளவு செய்யப்பட்டுள்ளது. எங்களது அந்த இடத்தை விட்டு காலி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எங்களுக்கு மாற்று இடம் கிடையாது. எனவே நாங்கள் அங்கேயே குடியிருந்து வசிக்க வழிவகை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News