கீழப்புலியூரில் தீமிதி திருவிழா
- கீழப்புலியூர் பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் சாமி கோவிலில் ஆவணி மாத தேர்த்திருவிழா நடைபெற்றது.திருவிழாவை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி காப்புகட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து சாமி வீதி உலா வந்த நிலையில் நேற்று காலை திருக்கல்யாணம் பூஜையும் நடைபெற்றது.தொடர்ந்து மாலை 4-மணியளவில் தேரினை பக்தர்கள் வடம் பிடித்து கோவிலைச் சுற்றி வந்து நிலையை அடைந்தது.பின்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள்.ஆடி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்புகளை மங்களமேடு உட்கோட்டம் காவல் துறை கண்காணிப்பாளர் சீராளன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.