உள்ளூர் செய்திகள்

ஆலத்தூர்கேட் பஸ் ஸ்டாப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

Published On 2022-11-22 09:28 GMT   |   Update On 2022-11-22 09:28 GMT
  • ஆலத்தூர்கேட் பஸ் ஸ்டாப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தப்பட்டது
  • கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

பெரம்பலூர் :

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதில் ஆலத்தூர் கேட் கிராம பொதுமக்கள் சார்பில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது-

திருச்சி முதல் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, ஆலத்தூர் ஊர் இருபுறமும் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் 400 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம் .

கிழக்கு பகுதியில் அரசு ஆரம்ப பள்ளியும், நியாய விலைகடையும் உள்ளது. மேற்கு பகுதியில் பாலதண்டாயுதபாணி கோவில் மற்றும் தோட்டக்கலை அலுவலகம் மற்றும் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது .நாளொன்றுக்கு 5ஆயிரம் கிராம பொது மக்கள் அச்சாலையை கடக்க வேண்டியுள்ளது.

இதனால் சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்து, உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே விபத்தை தடுக்கும் விதமாக அந்த பகுதியில் மேம்பாலம் வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News