உள்ளூர் செய்திகள்
மின்னல் தாக்கி கம்ப்யூட்டர்கள் கருகியது
- மின்சார வயர்கள் நாசம்
- பல லட்சம் சேதம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு தினங்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மாவட்டத்தில் பல பகுதிகளில் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது.மேலும் குறிப்பாக ஆலத்தூர் தாலுகாவில் உள்ள இரூர், பாடாலூர், செட்டிகுளம், காரை, கொளக்காநத்தம், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மாலை 3 மணி அளவில் ஆலத்தூர் யூனியன் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் அறையில் மின்னல் தாக்கியது அதில் அந்த அறையில் உள்ள மின்சார வயர்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் அனைத்தும் மின்னல் தாக்கி பழுதடைந்தது.பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.