செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
- வட்டார மகளிர் திட்ட மேலாளர் ஏற்பாடு செய்திருந்தார் .
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூரில் உள்ள ஓலைப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக சதுரங்க அமைப்பில் கோலமிட்டு பள்ளி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியை வேப்பூர் வட்டார மகளிர் திட்ட மேலாளர் அமுதா ஏற்பாடு செய்திருந்தார் .
வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலர்கள் மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், துணை வட்டாட்சியர்கள் ராஜேந்திரன், ராதிகா, மகளிர் திட்டம் உதவி அலுவலர் மகேசன் மற்றும் வட்ட வழங்க அலுவலர் சங்கர், வட்டார இயக்க மேலாளர் அமுதா, வட்டார ஒழுங்கங்கிணைப்பாளர்கள் புஷ்பா, மகாலட்சுமி, சரவணன், லதா, மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.