உள்ளூர் செய்திகள்

சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

Published On 2023-02-18 14:37 IST   |   Update On 2023-02-18 14:37:00 IST
  • சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
  • சிறப்பாக பணிபுரிந்த 9 போலீசாருக்கும் மற்றும் 11 ஊர்க்காவல் படையினருக்கும் பாராட்டு சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் போலீஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் போலீசாரிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும், புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்து கலந்தாய்வும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு ஆலோசனைகளையும் வழங்கி பேசினார். மேலும் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவண சுந்தர் சமீபத்தில் நடைபெற்ற குற்ற வழக்குகள் மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைவில் கைது செய்வது குறித்து போலீசாரிடைேய கலந்தாய்வு நடத்தினார். முடிவில் பெரம்பலூர் மாவட்ட போலீசாரில் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த 9 போலீசாருக்கும் மற்றும் 11 ஊர்க்காவல் படையினருக்கும் பாராட்டு சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார். பின்னர் அவர் கடந்த மாதத்தில் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் கொண்டாடிய 49 போலீசாருக்கு வாழ்த்து மடலை வழங்கினார்.


Tags:    

Similar News