உள்ளூர் செய்திகள்

திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைப்பு

Published On 2022-08-17 09:59 GMT   |   Update On 2022-08-17 09:59 GMT
  • திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.
  • பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூரில் ரூ.18 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 110 கிலோவாட் திறன் கொண்ட புதிய துணை மின் நிலையம் மற்றும் துறைமங்கலம் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள துறைமங்கலம் 110 கிலோவாட் துணை மின் நிலையத்தில் ரூ.1 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 16 மெகாவாட் அதிக திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றி ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து துணை மின் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றியால் பெரம்பலூர் நகர், அரணாரை, எளம்பலூர் இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம், அரியலூர் மெயின் ரோடு, கவுல்பாளையம், காவலர் குடியிருப்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி, அருமடல் ரோடு தொழிற்சாலை பகுதிகளில் உள்ள 40 ஆயிரத்து 386 மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரமும், அதேபோல கிருஷ்ணாபுரம் துணைக்கோட்டத்தில் உள்ள கை.களத்தூரை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள 8 ஆயிரத்து 324 மின் நுகர்வோருக்கு சீரான மின்சாரமும் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் மின்வாரிய அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News