உள்ளூர் செய்திகள்

சமூக நீதியை கடைபிடிக்கும் கட்சி பா.ஜ.க. தான்-மாநில பொது செயலாளர் பேட்டி

Published On 2022-09-19 12:19 IST   |   Update On 2022-09-19 12:19:00 IST
  • சமூக நீதியை கடைபிடிக்கும் கட்சி பா.ஜ.க. தான் என்று மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
  • தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. போராட்டம் நடத்தியுள்ளது.

பெரம்பலூர்:

பெரம்பலூரில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

நீதிமன்றத்தை நாடுவோம்

பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட கூடாது என மாநில அரசு காவல்துறை மூலம் தடுத்து வருகின்றனர். தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து பெரம்பலூரில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கட்சியினரை தாக்கிய போலீஸ் துைணசூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.யையும் மாவட்ட கலெக்டரையும் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். மேலும் திருச்சி கோட்ட பா.ஜ.க. வினர் சார்பில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துமு சூழ்நிலை ஏற்படும்.

பதில் சொல்ல வேண்டும்

ஆ.ராசா, மற்ற மதங்களில் குறிப்பிட்டுள்ள பெண்களுக்கு விரோதமாகவும், சமூக நீதிக்கான விரோதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ள விஷசங்களை பற்றி பேசமுடியுமா? மக்கள் பிரநிதியான ராசா அனைத்து மக்களுக்கும் பொதுவானராக இருக்கவேண்டும். இந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.

சமூக நீதியை கடைபிடிக்கும் கட்சி பா.ஜ.க. தான். சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு போன்றவற்றை கண்டித்தும், மக்களுக்கு விரோதமாக செயல்படும் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. போராட்டம் நடத்தியுள்ளது.

இந்து மக்களை பற்றி அவதூறாக பேசிய ஆ. ராசா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் அந்த பேச்சை வாபஸ் பெறவேண்டும். அதுவரை பா.ஜ.க. தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் செல்வராஜ் உடனிருந்தார்.

Tags:    

Similar News