உள்ளூர் செய்திகள்

மின் சிக்கனம்-பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Published On 2022-07-27 15:32 IST   |   Update On 2022-07-27 15:32:00 IST
  • மின் சிக்கனம்-பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • பொதுமக்களுக்கு இணைய வழி மூலமாக மின் கட்டணம் செலுத்துவது பற்றி விளக்கப்பட்டது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மேலப்புலியூர் மின் பகிர்மான பகுதியில் பொதுமக்களிடையேயும், பள்ளி மாணவ-மாணவிகளிடையேயும் மின் பாதுகாப்பு மற்றும் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பெரம்பலூர் கிராமிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தலைமையில், உதவி மின் பொறியாளர்கள் பாலமுருகன் (எசனை), பிரபாகரன் (குரும்பலூர்), சிறப்பு நிலை ஆக்க முகவர் ராமகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் மேலப்புலியூர் பொதுமக்களுக்கும், அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் மின் பாதுகாப்பு மற்றும் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் பொதுமக்களுக்கு இணைய வழி மூலமாக மின் கட்டணம் செலுத்துவது பற்றி விளக்கப்பட்டது.

Tags:    

Similar News