உள்ளூர் செய்திகள்

செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டு பயிற்சி

Published On 2023-03-22 08:48 GMT   |   Update On 2023-03-22 08:48 GMT
  • ஸ்ரீசாரதா மகளிர் கல்லுாரியில் நடைபெற்றது
  • நுண்ணறிவு வளர்த்துக்கொள்வது குறித்து விரிவான விளக்கம்

பெரம்பலூர்,

பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் நான் முதல்வன் திட்டம் இணைந்து 12 நாட்கள் நடத்திய செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்ததுவிழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.செயலாளர் விவேகான ந்தன், முதல்வர் சுபலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கே ற்றிவைத்தனர்.சிறப்பு விருந்தினராக எடுநெட் அகாடமி இயக்குநர் ராஜா கலந்துகொண்டு பேசுகையில், மாணவிகள் தகவல் தொழிலநுட்பத்தின் மூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவை வளர்த்து கொள்வது குறித்து விரிவாக பேசினார்.இதில் கணினி அறிவியல் துறை சூர்யா மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாகஇளங்கலை முதலாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி மோனிகா வரவேற்றார். முடிவில் இளங்கலை மூன்றாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி அனுஷா நன்றி கூறினார்.


Tags:    

Similar News