உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் நரிக்குறவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2023-02-26 11:58 IST   |   Update On 2023-02-26 11:58:00 IST
  • பெரம்பலூரில் நரிக்குறவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
  • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் தமிழ்நாடு நரிகுறவர் கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் நிறுவனர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். தென்னிந்திய ஆதிவாசிகள் நலச்சங்க தலைவர் ஞானசுந்தரி முன்னிலை வகித்தார். நரிக்குறவர்கள் சமு தாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததின் பயனாக கிடைக்க போகும் பயன்கள் குறித்தும், சமூக மக்களின் தொழில் வளர்ச்சி மேம்படுத்துதல் மற்றும் நரிக்குறவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துதல் போன்றவை குறித்து ஆலோசனை செய்ய ப்பட்டது.

கூட்டத்தில் மத்திய அரசு நரிக்குறவன் என்கிற குருவிக்கார இனமக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசிதழில் வெளியிட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதை தமிழக அரசு பழங்குடியினர் பட்டியலில் அதற்கான திருத்தத்தை மேற்கொண்டு 37 வது பிரிவில் சேர்த்து காலதாமதமின்றி விரைவில் நரிக்குற வர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நரிக்குறவர்கள் தொழில் முன்னேற்றம் அடைய தமிழகத்தில் இருக்கின்ற பேரூராட்சி, நகராட்சி. மாநகராட்சி, சுற்றுலாத்தலம் பேருந்து நிலையம் மற்றும் அன்னதான திட்டத்தின் கீழ் இயங்கும் பிரசித்த பெற்ற கோவில்களில் 5 கடைகள் ஒதுக்கீடு செய்து தொழில் தொடங்க மானிய கடன் வழங்க வேண்டும். வீட்டு மனைப்பட்டா. வீடு மற்றும் நிலமற்றவர்களுக்கு 3 ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய அரசு கொடுக்கவேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் நம்பியார் வரவேற்றார். துணை ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் நன்றி கூறினார்.




Tags:    

Similar News