பெரம்பலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக புதுமைப்பெண் திட்டத்தில் 681 மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்-கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்
- பெரம்பலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக புதுமைப்பெண் திட்டத்தில் 681 மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்
- பெரம்பலுார் மாவட்டத்தில் 1,671 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத் தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமா–மிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் "புதுமை பெண்" 2-ம் கட்ட நிகழ்ச்சி பெரம் பலூர் மாவட்டத்தில் குரும் பலூரில் உள்ள பெரம்ப–லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 681 மாணவிகளுக்கு கலெக்டர் கற்பகம் மாதம் ரூ.1,000 வீதம் உதவி தொகைக்கான வங்கி பற்று அட்டையினை வழங்கி பேசியதாவது:-பெண் பிள்ளைகளின் கல்வி எந்தக்காரணம் கொண்டும் தடைபட்டு விடக்கூடாது, இடைநிற்றல் இருக்கக்கூடாது, அரசுப் பள்ளிகளில் பயின்ற பெண்களின் உயர்கல்வி கனவை நினைவாக்க வேண்டும் போன்ற பல உன்னத நோக்கங்களுடன் தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் திட்டம் தான் புதுமைப்பெண் திட்டம். இந்த திட்டத்தை தமிழ் நாடு முதலமைச்சர் முதற் கட்டமாக 05.09.2022 அன்று செயல்படுத்திய நாளில் நமது பெரம்பலுார் மாவட்டத்தில் 1,671 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்.
இன்றைய தினம் இரண்டாம் கட்ட–மாக 681 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இவர்க–ளுக்கு மாதந்தோ–றும் ரூ.6,81,000 வழங்கப்பட–வுள்ளது. கல்வி மட்டும்தான் மாண–வர்களை எதிர்காலத்தில் ஆளுமைமிக்கவர்களாக உருவாக்கும். கல்வியறிவு இல்லையென்றால், பொரு–ளாதார சுதந்திரம் இல்லாமல் போகும். அவ்வாறு பொரு–ளாதார சுதந்திரம் இல்லை–யென்றால் நம் வாழ்வில் இறுதிவரை வேறு ஒருவரை சார்ந்திருக்க வேண்டியதாக இருக்கும். பெண் என்பவள் பருவத்தின்போது பெற் றோரையும், திருமணத் திற்கு பிறகு கணவரையும், பிறகு குழந்தைகளையும் சார்ந்திருக்க வேண்டியதாக இருக்கின்றது. அதனை மாற்றுவதற்கு நமக்கு கிடைத்த ஆயுதம் கல்வி. நான் அரசுப்பள்ளி–யில் பயின்ற மாணவி என்பதில் பெருமைப்படுகிறேன். கல்வியினை முறையாகப் பயன்படுத்தியதால்தான் இன்று உங்கள் முன்பு மாவட்ட ஆட்சித்தலைவராக நின்று கொண்டிருக்கின்றேன்.
தமிழ்நாடு அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்ப–டுத்தி வருகிறது. புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, எழுதுபொருட்கள் என கல்விக்கு ஏதுவான அனைத்து பொருட்களையும் அரசே வழங்கிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் நீட் கோச்சிங், இல்லம் தேடிக் கல்வி என பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகளும் அரசால் வழங்கப்பட்டு வரு–கின்றது. நமது பொறுப்பு என்னவென்றால் இவற்றை–யெல்லாம் நன்றாக பயன்படுத்திகொள்வது–தான் என்றார். இதில் போலீஸ் சூப்பி–ரண்டு ஷியாமளா தேவி, பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன், ஆர்.டி.ஓ. நிறைமதி, முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா, கல்லூரி முதல்வர் ரேவதி மற்றும் நகர்ப்பு–றம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநி–திகள் கலந்து கொண்டனர்.