உள்ளூர் செய்திகள்

இடைத்தேர்தலில் போட்டியிட மேலும் 4 பேர் வேட்பு மனு தாக்கல்

Published On 2022-06-25 07:30 GMT   |   Update On 2022-06-25 07:30 GMT
  • இடைத்தேர்தலில் போட்டியிட மேலும் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
  • வருகிற 9-ந்தேதி நடக்கிறது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவி, 4 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல்(இடைத்தேர்தல்) வருகிற 9-ந்தேதி நடக்கிறது.

அந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒன்றிய அலுவலத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட ஏற்கனவே ஒரு பெண், ஒரு ஆண் என 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்புலியூர் கிராம ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட பெண் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிலிமிசை கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஏற்கனவே ஒரு பெண் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று ஒரு பெண் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆலத்தூர் ஒன்றியத்தில் இரூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் வி.களத்தூர் கிராம ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது."

Tags:    

Similar News