உள்ளூர் செய்திகள்

அகரம்சீகூர் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

Published On 2023-06-11 12:12 IST   |   Update On 2023-06-11 12:12:00 IST
  • அகரம்சீகூர் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது செய்யபட்டனர்
  • மேலும் மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அகரம்சீகூர் அடுத்து ஒகளூர் கிராமத்தில் மணல் திருடப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் மேற்பார்வையில், மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் மற்றும் போலீசார் ஒகளூர் கிராமத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது ஒகளூர் பஸ் நிலையம் அருகே 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி சென்ற ஒகளூர் காமராஜர் நகரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 35), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (49), வடக்கு தெருவை சேர்ந்த ரவி (53) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News