உள்ளூர் செய்திகள்
சுதந்திர தின விழாவில் ரூ.2.05 கோடி நில திட்ட உதவி
- பெரம்பலூர் சுதந்திர தின விழாவில் ரூ.2.05 கோடி நில திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- 286 பயனாளிகளுக்கு கலெக்டர் கற்பகம் வழங்கினார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திரத்திருநாள் விழா நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் கற்பகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 286 பயனாளிகளுக்கு ரூ.2,04,74,026 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த 286 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.