உள்ளூர் செய்திகள்
கனிமொழி எம்.பி. நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அருகில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உள்ளனர்.
குதிரைமொழி ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
- முகாமில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்துகொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
- தி.மு.க. அரசு தான் மக்களை நேரடியாக தேடிச் சென்று பொது மக்களிடம் கோரிக்கை மனு வாங்கி கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக கூறினார்.
உடன்குடி:
உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குதிரைமொழி ஊராட்சிக்குட்பட்ட பாபநாசபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
முகாமில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்துகொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தி.மு.க. அரசு தான் மக்களை நேரடியாக தேடிச் சென்று பொது மக்களிடம் கோரிக்கை மனு வாங்கி கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக கூறினார். நிகழ்ச்சியில், தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.