உள்ளூர் செய்திகள்

மயானப்பாதை இல்லாததால் 3 நாட்களுக்கு பின் விசி மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா முயற்சியின் கீழ் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்ட சடலம்

மயானப்பாதை இல்லாததால் சடலத்தை கொண்டு செல்ல மறுத்த மக்கள்: 3 நாட்களுக்கு பின் அடக்கம்

Published On 2023-09-29 14:57 IST   |   Update On 2023-09-29 14:57:00 IST
  • சடலத்தை மயானத்திற்கு கொண்டு சென்ற போது சிலர் தடுத்ததாக தெரிகின்றது.
  • இரண்டு நாட்களாக சடலம் புதைக்கப்படாதமலேயே இருந்தது.

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கெளாப்பாறை கிராமத்தைச் சேர்ந்த சக்கு, (61) என்பவர் கடந்த புதன் கிழமையன்று காலமானார். அவரது சடலத்தை அருகில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்ல முயன்றபோது மயானத்திற்கான பாதை சிலர் தடுத்ததாக தெரிகின்றது.

இதனால் இப்பிரச்சனைக்கு நிரந்த தீர்வு கிடைக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் அப்பகுதியில் பொதுமக்கள் சடலத்தை கொண்டு செல்லாமல் மறியலில் இடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிக்ள் மற்றும் காவல் துறையினர் பல்வேறு சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் பொது மக்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

இதனால் இரண்டு நாட்களாக சடலம் புதைக்கப்படாதமலேயே இருந்தது. இந்நிலையில் நேற்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா பாதிக்கப்பட்ட மக்களிடத்திலும், காவல்துறை, வருவாய்த்துறை நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு பிறகு இறந்துபோன சக்குவின் உடலை தானே சுமந்துக்கொண்டு மயானத்திற்க்கு சென்று அடக்கம் செய்தார்.

நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி துணைச்செயலாளர் கேசவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Similar News