உள்ளூர் செய்திகள்

சாலையில் நடவு செய்து எதிர்ப்பை தெரிவித்த மக்கள்.

சகதியான சாலையில் நடவு நட்டு எதிர்ப்பை தெரிவித்த மக்கள்

Published On 2022-10-13 14:49 IST   |   Update On 2022-10-13 14:49:00 IST
  • வேலவன் நகர் குடியிருப்பு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
  • சாலையோரம் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்ட நிலையில் அதன் அருகிலேயே குடிநீர் குழாயும் பதிக்கப்பட்டுள்ளது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கதிராமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலவன் நகர் குடியிருப்பு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி சாலைகள் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து கிடக்கிறது. சாலையோரம் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்ட நிலையில் அதன் அருகிலேயே குடிநீர் குழாயும் பதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் கால்வாய் உடைந்து கழிவு நீர் தண்ணீரும் மழை நீரும் சேர்ந்து சாலை சேரும் சகதியும் ஆக மாறி உள்ளது.

குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் கழிவுநீர் கால்வாய் உடைந்ததால் குடிநீரும் கழிவுநீராக மாறி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சாலையை சீரமைத்து, கழிவு நீர் கால்வாயும் சீரமைக்கவும் குடிநீர் குழாயை முறையாக பராமரிக்கவும் வலியுறுத்தி சாலையில் நடவு செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags:    

Similar News