உள்ளூர் செய்திகள்

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்ட பொதுமக்கள்.

வத்தலக்குண்டுஅருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனம் அமைக்க மக்கள் எதிர்ப்பு

Published On 2022-12-22 05:25 GMT   |   Update On 2022-12-22 05:25 GMT
  • குடியிருப்பு பகுதியில் தனி நபர்ஒருவர் பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனி அமைக்க கட்டிடப் பணிகளை செய்து வருகிறார்
  • அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு நுழைவுவாயில் சோணை கருப்பசாமி கோவில் பின்புறம் குடியிருப்பு பகுதியில் தனி நபர்ஒருவர் பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனி அமைக்க கட்டிடப் பணிகளை செய்து வருகிறார்.

இதனால் குடிநீர் மற்றும் காற்று மாசுபட்டு பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று கூறி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில் பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனிஅமைக்க ஏற்பாடு செய்து வருபவர் மாசு ஏற்படாத வண்ணம் வேறு தொழில் தொடங்கட்டும். குடியிருப்பு பகுதியில் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனம் தொடங்கினால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். எனவே வேறு பகுதியில் இதனை அமைக்க வேண்டும்.

இதற்கு தீர்வு காணப்படாவிட்டால் அப்பகுதி மக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களை அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News