உள்ளூர் செய்திகள்

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

நிலக்கோட்டை அருகே அங்கன்வாடி மைய கட்டிடம் கேட்டு முற்றுகை போராட்டம்

Published On 2022-11-16 10:53 IST   |   Update On 2022-11-16 10:53:00 IST
  • அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்ற முயன்றனர். இதற்கு சீரகம்பட்டியைச் சேர்ந்த ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • சீரகம்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு நில க்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிலுக்கு வார்பட்டி ஊராட்சி சீரகம்பட்டி கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வரு கின்றனர். இக்கிராமத்தில் உள்ள குழந்தைகள் படிப்பத ற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

இந்த கட்டிடத்திற்குள் தற்போது மழை பெய்வதால் தண்ணீர் புகுந்து பள்ளி நடத்த முடியாத நிலை உள்ளது. மேலும் கட்டிடம் தற்போது பழுதடைந்த நிலையில் இருப்பதால் அதனை உடனடியாக அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிலக்கோட்டை ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க ப்பட்டது. இந்நிலையில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் சென்று சீரகம் பட்டியில் அமைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்ற முயன்றனர். இதற்கு சீரகம்பட்டியைச் சேர்ந்த ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சீரகம்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு நில க்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உடனடியாக அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம்நில க்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அண்ணாதுரை பேச்சு வார்த்தை நடத்தினார். உடனடியாக அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை பொது மக்கள் கைவிட்டனர்.

Tags:    

Similar News