உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஆண்டிபட்டி : போலி டாக்டரை கைது செய்ததால் போலீஸ் நிலையம் முற்றுகை

Published On 2023-04-27 12:53 IST   |   Update On 2023-04-27 12:53:00 IST
  • கேரளாவை சேர்ந்த ஒருவர் கிளீனிக் வைத்து பொதுமக்களுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
  • அப்பகுதி மக்கள் ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டு டாக்டருக்கு ஆதரவாகவும், அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோசமிட்டனர்.

ஆண்டிபட்டி, ஏப்.27-

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அனுப்பப்பட்டி ரெங்கராம்பட்டி கிராமத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கேரளாவை சேர்ந்த பாபு(62) என்பவர் கிளீனிக் வைத்து பொதுமக்களுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து சிலர் புகார் அளித்தனர். அதன்பேரில் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல இணைஇயக்குனர் பரிமளா ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் ரெங்கராம்பட்டிக்கு சென்று டாக்டர் பாபுவை கைது செய்து அங்கிருந்த மருத்துவ உபகரண பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனைதொடர்ந்து ஒன்றுதிரண்ட கிராமமக்கள் ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். டாக்டருக்கு ஆதரவாகவும், அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோசமிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிபட்டி டி.எஸ்.பி ராமலிங்கம் விரைந்து வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாக்டர் பாபு சிகிச்சை அளித்து யாரும் பாதிக்கப்படவில்லை. மேலும் ஏழை மக்களிடம் பணம் வாங்காமல் கூட மருத்துவம் பார்த்து வருகிறார். எனவே அவரை விடுவிக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கைவிடுத்தனர். இதனைதொடர்ந்து அலோபதி சிகிச்சை மேற்கொள்ளக்கூடாது என பாபுவை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனைதொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News