உள்ளூர் செய்திகள்

கண்டமங்கலம் அருகே பள்ளித்தென்னல் ஊராட்சிக்கு உட்பட்ட பூஞ்சோலைக்குப்பம் கிராமத்திற்கு குடித்தண்ணீர் கேட்டு புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர்.

கண்டமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-05-03 12:39 IST   |   Update On 2023-05-03 12:39:00 IST
  • 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து பலமுறை கண்டமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
  • தென்னல் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளித்தென்னல் ஊராட்சியில் பூஞ்சோலை குப்பம் கிராமத்தில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து பலமுறை கண்டமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர் ஆனால் பொதுமக்கள் அளித்த மனுவிற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்தும் குடிநீர் வழங்காததை கண்டித்தும் பள்ளி தென்னல் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுற ங்களிலும் வாகனங்கள் அனிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனங்கள் செல்வதற்கு பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

மேலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த இடம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலை வருகிறது.

Tags:    

Similar News