உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

குன்னூரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற வியாபாரிகளுக்கு அபராதம்

Published On 2023-08-02 14:48 IST   |   Update On 2023-08-02 14:48:00 IST
  • ஆப்பிள் பி பகுதியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
  • சம்பந்தப்பட்ட கடை மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், பாட்டில், பிளாஸ்டிக் வாழை இலைகள், தோரணம்-கொடிகள் உள்ளிட்ட 19 வகை பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் இதனை பெரும்பாலான வியாபாரிகள் மதிக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக புகார்கள் வந்தன.

எனவே வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தி, அங்கு சிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார். தலைமையில் வட்டாட்சியர் கனிசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் அடங்கிய குழுவினர், ஆப்பிள் பி பகுதியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு உள்ள பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் ஆகியவை இருப்பது தெரிய வந்தது.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடை மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பிறகு வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை விற்கவோ பயன்படுத்தவோ கூடாது. அப்படியான செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News