உள்ளூர் செய்திகள்

கிணற்றில் விழுந்த மயிலை மீட்ட தீயணைப்பு வீரர்களை படத்தில் காணலாம்.

கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு

Published On 2023-04-22 15:32 IST   |   Update On 2023-04-22 15:32:00 IST
  • 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் நேற்று மயில் ஒன்று தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது
  • 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

ஏரியூர்,

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள சின்னத்தலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பு. இவரது மகன் பிரவீன் குமார்.

இவருக்கு சொந்தமான 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் நேற்று மயில் ஒன்று தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது.

இதனைக் கண்ட அவர் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் அவசர எண்ணிற்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில்,சிறப்பு நிலைய அலுவலர் முரளி,தீ யணைப்பு ஓட்டி சிதம்பரம், தீயணைப்போர்கள் ராஜி, கேப்டன்ராஜ், கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் விவசாய கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மயிலை பென்னாகரம் வனத்துறை ஊழியர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News