உள்ளூர் செய்திகள்

நிர்மலா சீதாராமன், ப.சிதம்பரம்

காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது- ப.சிதம்பரம்

Published On 2022-10-09 20:19 GMT   |   Update On 2022-10-09 20:19 GMT
  • மயிலாப்பூரில் காய்கறி வாங்கும் வீடியோவை மத்திய நிதி மந்திரி வெளியிட்டிருந்தார்.
  • மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வீடியோ குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்.

திருப்பூர்:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கியதுடன்  அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார். அங்குள்ள வியாபாரிகளிடம் காய்கறி விலை குறித்து அவர் விசாரித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான சிதம்பரம் கூறியுள்ளதாவது:

கடந்த 6 மாதங்களில் மட்டும் 2 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளுக்கு பணவீக்கம் காரணமாக விலைவாசி உயரும் என்பதை ரிசர்வ் வங்கி ஆளுநரே ஒப்புக் கொள்கிறார். மயிலாப்பூர் சந்தைக்கு சென்று (மத்திய நிதி மந்திரி) காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News