வெற்றி பெற்ற மாணவர்கள் படத்தில் காணலாம்.
மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பாவூர்சத்திரம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
- தமிழ்நாடு அரசு பள்ளி விளையாட்டு துறை சார்பாக மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
- பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இண்டியன் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளி விளையாட்டு துறை சார்பாக மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இண்டியன் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டனர்.
அதில் இசக்கி சந்துரு 53 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், பால் மணி 60 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும்,கோமதி சங்கர் 90 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், சுகுமார் 45 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும், கிஷோர் கவிஷ் வெண்கல பதக்கமும் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களும் த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்களை பயிற்சியாளர் மாஸ்டர் கணேஷ் மற்றும் ராம்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.