உள்ளூர் செய்திகள்

ஆம்புலன்ஸ் இல்லாததால் மீனாட்சி சுந்தரம் தனியார் வாகனத்தில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட காட்சி.

முக்கூடல் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் இல்லாததால் நோயாளிகள் அவதி

Published On 2023-02-08 09:09 GMT   |   Update On 2023-02-08 09:09 GMT
  • முக்கூடல் தாம்போதி பாலத்தில் செல்லும்போது மாடு குறுக்கே வந்ததால் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நடராஜன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
  • ஆம்புலன்ஸ் இல்லாததால், நீண்ட நேர தாமதம் ஏற்பட்டு, அதன்பின்னர் தனியார் வாகனத்தில் அவர் நெல்லைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

முக்கூடல்:

சேரன்மகாதேவி முடுக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). இவரும், அதே ஊரை சேர்ந்த பழைய கிராமம் தெருவில் வசிக்கும் மீனாட்சிசுந்தரம் (64) ஆகிய இருவரும் இடைகால் சிவன் கோவிலில் பூஜை செய்துவிட்டு ேமாட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

மோட்டார் சைக்கிளை நடராஜன் ஓட்டினார். கடையம் - நெல்லை ரோட்டில் முக்கூடல் தாம்போதி பாலத்தில் செல்லும்போது மாடு குறுக்கே வந்ததால் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நடராஜன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஏற்பட்ட விபத்தில் மீனாட்சி சுந்தரத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உயிருக்கு போராடிய மீனாட்சி சுந்தரத்திற்கு முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் பரிந்துரைத்த நிலையில், அந்த ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் இல்லாததால் தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுக்க சென்றனர். இதனால் நீண்ட நேர தாமதம் ஏற்பட்டு, அதன்பின்னர் தனியார் வாகனத்தில் அவர் நெல்லைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News