உள்ளூர் செய்திகள்

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

Published On 2023-03-04 06:59 GMT   |   Update On 2023-03-04 06:59 GMT
  • சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.
  • கூட்டத்தில் முதலாமாண்டு மாணவியின் தந்தை கணேஷ்பாண்டியன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ஜமுனாராணி தலைமை தாங்கி வரவேற்றார். இதில் இந்த கல்வியாண்டில் அரசு மாணவிகளுக்கு அறிவித்துள்ள 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் செயல்படும் தொழில் நுட்ப படிப்புகள் குறித்தும், அரசு பள்ளியில் படித்த மாணவியருக்கு மாதந்தோறும் ரூ. 1000 தமிழக அரசு வழங்குகிறது என்ற தகவலும் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் முதலாமாண்டு மாணவியின் தந்தை கணேஷ்பாண்டியன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் திசையன்விளையிலிருந்து மாணவிகளுக்கு கல்லூரிக்கு வந்து செல்ல இலவச பஸ் வசதி செய்து தரும்படி பெற்றோர்கள் மனு அளித்தனர். அந்த மனு போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழகக் செயலர் பூங்கொடி நன்றி கூறினார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News