உள்ளூர் செய்திகள்

 பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கடலூர் கலெக்டர் டாக்டர்அருண் தம்பு ராஜ் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கடலூர் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2023-06-02 07:43 GMT   |   Update On 2023-06-02 07:43 GMT
  • மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
  • அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார்.

கடலூர்:

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் திடீர் ஆய்வு செய்தார்.அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மாலினி வரவேற்று அழைத்துச் சென்றார். ஆய்வின் போது புறநோயாளிகள்பிரிவு, தொற்றா நோய் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, ஆய்வகம், மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு செய்து, புறநோயளிகள் பிரிவில் பதிவு மேற்கொள்ளப்படுவது மற்றும் பல்வேறு பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெறவந்த பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.நோயாளிகளிடம் காசு கொடுத்தீர்களா என்று கேட்டதற்கு இல்லை நன்றாக கவனிக்கிறார்கள் என்று நோயாளிகள் தெரிவித்தனர். அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார். டாக்டர்கள், துப்புரவு பணியாளர்கள், செவிலியர் பற்றாக்குறை உள்ளது என்று தலைமை மருத்துவர் எடுத்து கூறினார்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News