ஜீப்பை மறித்த ஒற்றை யானை.
பாச்சலூர் அருகே வாகனத்தை வழிமறித்து மிரட்டிய ஒற்றை யானையால் பீதி
- ஒட்டன்சத்திரம் - பாச்சலூர் ரோடு தட்டக்குழிக்காடு பகுதியில் ஜீப் சென்று கொண்டு இருந்தபோது திடீரென வனப்பகுதிக்குள் இருந்து வந்த ஒற்றை யானை ஜீப்பை மறித்தது.
- காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் வரும் சமயங்களிலும் இது போன்று யானை வாகனங்களை மறித்து மிரட்டி செல்கிறது.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களில் தொடர்ந்து யானை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவை குடிநீர் மற்றும் உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் பீதியடைந்து உள்ளனர்.
மலை கிராமங்களில் அரசு பஸ் இல்லாத நேரங்களில் பிக்அப் வேன், ஜீப் போன்ற வாகனங்களை பயணத்துக்கு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி பாச்சலூரைச் சேர்ந்த அருண்குமார் (வயது 26) என்பவர் தனது கர்ப்பிணி மனைவியான பிரியாவை ஒட்டன்சத்திர த்தில் உள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு ஜீப்பில் அழைத்து சென்றார்.
ஒட்டன்சத்திரம் - பாச்சலூர் ரோடு தட்டக்குழிக்காடு பகுதியில் ஜீப் சென்று கொண்டு இருந்தபோது திடீரென வனப்பகுதிக்குள் இருந்து வந்த ஒற்றை யானை ஜீப்பை மறித்தது. இதனால் பயந்து போன டிரைவர் ஜீப்பை வேகமாக ஓட்டினார்.
இருந்தபோதும் அந்த யானை ஜீப்பை துரத்திக் கொண்டே சென்றது. இதனை அங்கிருந்த விவ சாயி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்க ளில் வெளியிட்டார்.
ஒரு வழியாக யானையிடம் இருந்து தப்பி ஜீப் அங்கிருந்து வேகமாக சென்றதால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் வரும் சமய ங்களிலும் இது போன்று யானை வாகனங்களை மறித்து மிரட்டி செல்கிறது.
எனவே வனத்துறையினர் கண்காணித்து யானையை அதன் இருப்பிட பகுதிக்கு விரட்டி விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.