உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழாவில்  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார் .அருகில் கலெக்டர் பாலசுப்ரமணியம் உள்ளார்.

கடலூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு

Published On 2023-04-28 07:26 GMT   |   Update On 2023-04-28 07:26 GMT
  • அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியிலிருந்து பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.
  • இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடலூர்:

கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கலையரசி வரவேற்றார். விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நூற்றாண்டு வளைவை திறந்து வைத்து, மலர் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியிலிருந்து பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

இதில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, முன்னாள் எம்.பி வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி குழு தலைவர் என்ஜினீயர் சிவகுமார், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, நாராயணசாமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுகப்பிரியா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News