- நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக இவர் மீது மாவட்ட நிர்வாகத்திற்க்கு புகார்கள் சென்றன.
- ஊராட்சி மன்ற செயலாளர் வேலுவை பணி நீக்கம் செய்து பணியிலிருந்து விடுவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் கரகதஅள்ளி ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வந்தவர் கடமடையை சேர்ந்த வேலு (வயது.40). இவர் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக இவர் மீது மாவட்ட நிர்வாகத்திற்க்கு புகார்கள் சென்றன.
இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இந்த நிலையில் அதிகாரிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த பதிவேடுகளை கைபற்றி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. இது குறித்து கலெக்டருக்கு அறிக்கை அளித்தனர்.
இதடையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கரகதஅள்ளி ஊராட்சி மன்ற செயலாளர் வேலுவை பணி நீக்கம் செய்து பணியிலிருந்து விடுவித்துள்ளார். நிதி முறைகேட்டால் ஊராட்சி செயலாளரின் பணி நீக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.