உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

மானூரில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்

Published On 2022-08-26 09:48 GMT   |   Update On 2022-08-26 09:48 GMT
  • கூட்டத்தில் மானூரில் அரசு கலை கல்லூரி கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
  • ஊராட்சி செயல்பாடுகளில் ஒத்துழைப்பு இல்லாத ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஊராட்சிகளில் உள்ள வரி செலுத்தாத காற்றாலைகள் உடனே வரிகளை செலுத்திட நடவடிக்கை எடுத்திடவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை:

மானூர் யூனியனுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் மானூர் ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். செயலாளர் பீர்முகைதீன் வரவேற்றார். பொருளாளர் வெள்ளப்பாண்டி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மானூரில் அரசு கலை கல்லூரி கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஊராட்சி செயல்பாடுகளில் ஊராட்சி துணைத்தலைவர் கையெப்பமிடும் அதிகாரம் ரத்து செய்து விடவும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதலாக நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தப்பட்டது.

ஊராட்சி செயல்பாடுகளில் ஒத்துழைப்பு இல்லாத ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஊராட்சிகளில் உள்ள வரி செலுத்தாத காற்றாலைகள் உடனே வரிகளை செலுத்திட நடவடிக்கை எடுத்திடவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் லோக சங்கர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டமைப்பு துணைத்தலைவர்கள் ஆஷா தேவி, சுப்பிரமணியன், இணைச்செயலாளர் சுப்புலட்சுமி, துணைச் செயலர்கள், சேர்மகனி, பராசக்தி, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News