உள்ளூர் செய்திகள்

பள்ளிபாளையம் அரசு பள்ளி காவலாளி கொலையில்4 பேர் பிடிபட்டனர்

Published On 2023-04-01 09:36 GMT   |   Update On 2023-04-01 09:36 GMT
  • காவேரி ஆர்.எஸ்.பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
  • கடந்த 5 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளியில் இரவு நேர காவலாளியாக இருந்து வந்தார்.

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ்.பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் அந்த பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது78) காவலாளியாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளியில் இரவு நேர காவலாளியாக இருந்து வந்தார்.

கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தபோது மர்மமான முறையில் நடராஜன் இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரி யர்கள் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிபாளையம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

4 பேர் பிடிபட்டனர்

விசாரணையில் இரவு நேரத்தில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர் சிலர் மது குடிக்கவும்,. சீட் ஆடுவ தற்கும், கஞ்சா போடு வதற்கும், பள்ளி வளா கத்திற்கு வருகின்றனர். சம்பவத்தன்று அந்த வாலி பர்களுக்கும் நடராஜருக்கும் இடையே வாக்குவாத ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதனால் அந்த அந்த வாலிபர்கள் நடராஜனை கழுத்து நெறித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதி சேர்ந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News