உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.

பாலக்கோடு போலீஸ் குடியிருப்பில் காவலர் குறை தீர்ப்பு முகாம்

Update: 2022-06-30 10:32 GMT
  • இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் தலைமை வகித்தார்.
  • காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.

பாலக்கோடு, 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையத்தில் காவலர் குடியிருப்பில் காவலர் குடும்பங்களின் குறை தீர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் தலைமை வகித்தார்.

இதில் பாலக்கோடு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பஞ்ச ப்பள்ளி, மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடையே குறைகளை கேட்டறிந்தார்,

அதில் காவலர்களுக்கு பணிச்சுமை, மேலதிகாரிகளின் தொந்தரவு காரணமாக ஏற்படும் மன அழுத்தம், விரக்தியால் குடும்ப உறுப்பினர்களிடம் கடுமையாக நடந்து கொள்வது குறித்து கேட்டறிந்தார்.

மேலும் கணவன் , மனைவி வெவ்வேறு பகுதியில் பணி புரிந்து வருவதால் இருவரும் ஒரே பகுதியில் பணி புரிய வழிவகை செய்வது, பணி சுமையால் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் ஆகியவற்றில் முறையாக கவனம் செலுத்துகின்றனரா ஆகியவை குறித்து ஒவ்வொரு காவலரிடமும் தனி தனியாக கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் டி.எஸ்.பி தினகரன், இன்ஸ்பெக்டர் தவமணி, கவிதா மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குடும்பங்களுடன் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

Similar News